Header Ads



தாராளமாக ஹிஜாப் அணியலாம், உரிமை மறுக்கப்பட்டால் அகிம்சாவழியில் நீதிமன்றத்தை நாடுங்கள்


ஒரு முஸ்லிம் பெண் தாதியர் அல்லது முஸ்லிம் சிற்றூழியர் தாராளமாக ஹிஜாப் அணியலாம். இதில் எந்தத் தடையும்   இல்லை. சிறுவயது முதலே ஹிஜாப் அணிந்த சகோதரிகளைப் பார்த்து அதை கழற்று எனக்கூற எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. அருகதையும் கிடையாது. ஹிஜாப் இலங்கையில் எங்கேயும் அனுமதிக்க மறுக்கப்பட்டால் உடனயாக நீதிமன்றத்தை நாடி அகிம்சா வழியில் உங்கள் உரிமையை உறுதிப்படுத்துங்கள்.


பொது நிர்வாக சுற்றறிக்கை 13/2019 (I)2019 ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட Public Administration Circular 13/2019(I) – Attire of Public Officers-ல், மத வழக்கப்படி ஆடை அணியும் அரச உத்தியோகத்தர்களுக்கு முக்கியமான ஏற்பாடு உள்ளது.


மத சம்பிரதாயத்தின் அடிப்படையில் ஆடை அணியும் உத்தியோகத்தர்கள், வழக்கமான அலுவலக ஆடையுடன் தங்களுடைய மத அடையாளத்தைப் பேணுவதற்கான மேலதிக ஆடையை அணியலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முகம் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.