Header Ads



சுரேஷ் சல்லேயின் மனைவி ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை


சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அனுரகுமாரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சல்லேயின் மனைவி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.  சல்லே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். 

No comments

Powered by Blogger.