ஹிஜாப் இஸ்லாத்திற்கு அவசியமானது அல்ல: உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவு
பாடசாலைகளில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரிய பதினொன்றாம் வகுப்பு மாணவியின் மனுவை உத்தரப்பிரதேச அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை அல்ல என்றும், பாடசாலை சீருடைமைக் கொள்கையே மேலானது என்றும் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது.
பிரயாக்ராஜில் உள்ள தாகூர் பொதுப் பாடசாலையின் (Tagore Public School) பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், பாடசாலையின் சீருடைமைக் கொள்கையை எதிர்த்தும், தலையில் முக்காடு அல்லது ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரியும் தாக்கல் செய்த மனுவையே அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாடசாலைக் சீருடையுடன் ஹிஜாப் அல்லது முக்காடு அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை எதிர்த்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

Post a Comment