Header Ads



பூஜித்தவின் மரண தண்டனை தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - அலி சப்ரி


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிறப்பு  மூவர் அடங்கிய நிலையான மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


இது உண்மை, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.


இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், இந்தத் தண்டனைத் தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை 


(முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி)

No comments

Powered by Blogger.