Header Ads



வாழ்வு ஒரேயொரு முறைதான். தவறான முடிவுகளை மேற்கொள்ளாதீர்கள்


வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் தமது உடலில் தீ வைத்துக் கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் இருவரும், யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.


தீயில் அகப்பட்டுக் கொண்டதால் ஏற்பட்ட வலியின் காரணமாக அவர்கள் கத்தியழுததைக் கேட்ட அயலவர்கள் உடனடியாக அங்கு வந்து, இருவரையும் தெல்லிப்பழை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


எனினும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்தமையால் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு வைத்துப் பொலிஸாரால் பெறப்பட்ட வாக்குமூலங்களில், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியாலேயே தாங்கள் உடலில் தீ வைத்துக் கொண்டதாக அந்த யுவதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.  குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.