துபாயில் பதுங்கியிருந்த ‘பஸ் லலித்’ இலங்கைக்கு
களுத்துறை தெற்கு, துவ பன்சல வீதியைச் சேர்ந்த 36 வயதான இவர், துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-226 விமானத்தில் இன்று (25)அதிகாலை 5.20 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் மீது ஹங்வெல்ல, அவிசாவளை, கட்டுகுருந்த, பாடுக்க, மீகொட மற்றும் கல்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், C-4 வகையைச் சேர்ந்த அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கடுமையான பாதுகாப்பின் கீழ் கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment