Header Ads



பாண் விலை அதிகரிக்கிறது


இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன, கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் உயர்த்தியதனைத் தொடர்ந்தே இவ்வாறு பாணின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 


இதனிடையே, ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.