Header Ads



மண்சரிவினால் நிர்க்கதியானவர்களுக்கு வீடுகளை வழங்கிய ஜனாதிபதி


மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட "நவோதயாபுரம்" வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று (28) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையில் நடைபெற்றது.


மேலும், இத்திட்டம் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகச் செயற்படுத்தப்படும் ஒரு சிறப்பான வேலைத்திட்டம் என்று பாராட்டியதுடன், அதற்குப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் வீட்டு நிர்மாணப் பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரமான மற்றும் பாராட்டுக்குரிய பங்களிப்பை வழங்கிய இலங்கை இராணுவப் பொறியியல் படையணிக்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்துள்ளார்.  



No comments

Powered by Blogger.