தெற்காசிய கால்பந்துச் சம்மேளன, துணை தலைவராக ஜஸ்வர் உமர்,
தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் துணை தலைவராக, இலங்கை கால்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் (SAFF) நிறைவேற்று குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சார்க் பிராந்தியத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகமனதான ஆதரவுடன் கிடைத்துள்ள இந்தப் பதவியானது, இலங்கை கால்பந்து வரலாற்றில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அவரது தலைமையின் கீழ் இலங்கையின் FIFA உலகத் தரவரிசை 207 ஆவது இடத்திலிருந்து 187 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தெற்காசிய கால்பந்துச் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு மேலதிகமாக, அவர் ஏற்கனவே FIFA அடிமட்ட கால்பந்துக் குழு மற்றும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் (AFC) வளர்ச்சிக் குழு ஆகியவற்றிலும் உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment