தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர்..
தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின் சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று சுஜீவ Mp சேனசிங்க தெரிவித்துள்ளார்.
"சிறைக்குள் இருக்கும் கைதிகளையோ அல்லது சிறைச்சாலை அமைப்பைக் கூட முறையாக நிர்வாகிக்க முடியாத தற்போதைய அரசால், ஒட்டுமொத்த நாட்டையும் அதன் மக்களையும் எவ்வாறு பாதுகாத்துச் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும்.
தவறு செய்தவர்களுக்குச் சட்டப்படி நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டுமே தவிர, சிறைச்சாலைகளுக்குள்ளேயே அவர்களுக்கு மறைமுக மரண தண்டனை கிடைக்கும் நிலைமை உருவாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தனது உண்மையான நிலையை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment