Header Ads



மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் சர்ச்சைக்குரிய கருத்து


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியைப் பார்த்து ஹேமசிறி பெர்னாண்டோ, "நீதிபதி ஐயா, இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.


இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.