855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி
855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்மானித்து பூஜித் ஜயசுதந்தரக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இவர்கள் இருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக 2022ஆம் ஆண்டில், மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்துத் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து, இதற்கு எதிராக அரசு தலைமை சட்டத்தரணி தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கில் எதிர் தரப்பின் சாட்சியங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment