Header Ads



A/L மாணவன் போதைப் பொருட்களுடன் கைது


கன்னொருவ பிரதேசத்தில் உள்ள பிரசிபெற்ற ஆண்கள் பாடசாலையில் உயர்தர கல்வி கற்கும் மாணவன் ஒருவன், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்டி அலுவலக அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான்.


கைது செய்யப்பட்ட மாணவனின் வசமிருந்த 05 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 15 கிராம் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


அடுத்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 18 வயதுடைய குறித்த மாணவன், பேராதனை - கன்னொருவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பேராதனை - கெந்தகெடவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

No comments

Powered by Blogger.