நம்பர் 1 வீரராக முன்னேறி வரலாற்றுச் சாதனை
இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரராக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், 89.75 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம், பொதுநலவாய விளையாட்டுகளில் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுக் கொடுத்தார்.
தேசிய சாதனைகளை முறியடித்து, சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயரை உயர்த்தியுள்ள ருமேஷ் தரங்க, தற்போது உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

Post a Comment