Header Ads



A/L பரீட்சை- நாளை அவசர கலந்துரையாடல்

 


நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் A/L பரீட்சை தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.


இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.


தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.