Header Ads



அவசரமாக 5 நாடுகளின் உதவியை நாடியுள்ள இலங்கை


2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் திருட்டுக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சாம்பியா உள்ளிட்ட 5  நாடுகளிடம் இலங்கை பரஸ்பர சட்ட உதவியை கோரியுள்ளதாகப் அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளே இலங்கை சட்ட உதவி கோரியுள்ள ஏனைய நாடுகளாகும்.


கடன் சேவையின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் திருட்டுக்குள்ளான விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.