Header Ads



450 கோப்புகள் எங்கே..?


தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிக்கையையும், வழங்கிய வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதாக  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சக் காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் 450 கோப்புகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துகள் தற்போது மறக்கப்பட்டுவிட்டது.


“மகிந்த ராஜபக்ச பெற்றதாகக் கூறப்பட்ட காசோலைகளின் இலக்கங்கள் தெரியும் என்றும், தொகைகள் தெரியும் என்றும், ஹோட்டல்கள் குறித்தும் தெரியும் என்றும் கூறினார்கள். இப்போது 2 வருடங்கள் ஆகப்போகின்றன. அவற்றுக்கு என்ன நடந்தது? எதுவுமே இல்லை” 


ஒரே பேனா கையெழுத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதாகக் கூறிய போதிலும், தற்போது அரிசியின் விலை சுமார் 10 ரூபாயால் அதிகரித்துள்ளது

விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை ‘சட்டவிரோத மதுபானம் விற்பவர்கள்’ எனக் கூறி அவமதிப்பதாகவும் ஜோன்ஸ்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.