Header Ads



36 பில்லியன் டொலர்களை கடப்பதே தமது இலக்கு


2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடப்பதே தமது இலக்கு என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளைச் சந்தித்த போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சந்தைகளில் நிறுவப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தகம் மற்றும் பரந்த பொருளாதார நலன்களை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார். 

No comments

Powered by Blogger.