Header Ads



ஆலயத்தின் நகைகளைத் திருடி 2 கோடி 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்த குருக்கள்


கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் அனைத்தும் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன.


ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில், தர்மகத்தாக்களான ஏ.எம்.ரி.தனநாயகம் 12.4 மில்லியன் ரூபாவையும், திருக்குமாரன் நடேசன் 12.4 மில்லியன் ரூபாவையும் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்டுள்ளனர்


ஆலயத்தில் கடமையாற்றிய குருக்கள்  நகைப்பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி இத்திருட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் திருடிய நகைகளைக் அடகு வைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.


கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே இத்திருட்டு வெளிச்சத்திற்கு வந்ததுடன், ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டனர். குருக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதிவான், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கனகராஜா சரவணன் 

No comments

Powered by Blogger.