ஹோர்முஸ் நீரிணையினை தன்வசப்படுத்தி, கட்டணம் வசூலிக்கப் போகிறேன்
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இந்த முக்கிய நீர்வழியைப் பாதுகாத்து நிர்வகிப்பதற்குக் பிரதிபலன் பெறும் நாடுகள் அமெரிக்காவிற்குப் பணம் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அந்த நீரிணையை எங்கள் வசம் எடுத்து அதன் கட்டுப்பாட்டைச் செயல்படுத்த முடியும். நாங்கள் அதன் பாதுகாவலராக மாறுவோம். ஒருவேளை அதை 'நீரிணையின் காவல் தேவதை' (Guardian Angel) என்று கூட அழைக்கலாம். அத்துடன் நாங்கள் செய்யும் அந்தச் சேவைக்காக எங்களுக்குப் பணம் செலுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
"நாங்கள் அதைப் பாதுகாப்போம். அதற்காக எங்களுக்குப் பெருமளவு பணம் கிடைக்க வேண்டும். ஏனைய நாடுகள் மிகவும் செல்வந்த நாடுகள். அவர்கள் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். எனவே, நாங்கள் இதைச் சும்மா செய்வோம் என்று எங்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது" என்று ட்ரம்ப் மேலும் கூறினார்.

Post a Comment