Header Ads



லால் காந்தவை உடனடியாக பதவி நீக்குமாறு வலியுறுத்தல்


விவசாய அமைச்சர் லால் காந்தவிற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சரை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுருத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்விடயத்தை தேசிய விவசாயிகள் அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.


அவர், விவசாய அபிவிருத்திச் சட்டத்தை மீறி நெற்பயிரச்செய்கை நிலங்களை (கும்பூர்) ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சுமத்தி, தற்போது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி நெல் நிலங்களை நிரப்புவதோ அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். See less

No comments

Powered by Blogger.