இலங்கை வம்சாவளியான உமா குமரன், பிரித்தானிய துணை அமைச்சராக நியமனம்
பிரித்தானிய அமைச்சரவையில் இலங்கை தமிழ் வம்சாவளியான உமா குமரனுக்கு வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் நாடாளுமன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். உலகளவில் நிலையற்ற ஒரு காலகட்டத்தில், பிரித்தானியாவின் குரலும் சர்வதேசத் தலைமைத்துவமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது மாபெரும் நாட்டிற்கு சேவையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980களில் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறியுள்ளனர்.

Post a Comment