Header Ads



ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு முயற்சிக்கின்றது


ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு முயற்சிக்கின்றது என்றும், அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்குக் கிடையாது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.


கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றது. நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.


அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்கு இல்லை. நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.