ஒஸ்மானியாவை பாதுகாப்போம் நிகழ்வு
இந்த நிகழ்வுக்கு மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) அவர்கள் தலைமை தங்கினார்கள். விஷேட அதிதிகளாக கதீஜா கல்லூரி அதிபர் ஜன்ஸி கபூர் அவர்களும் , ஒஸ்மானியா பிரதி அதிபர் இன்பக்குமார் குரூஸ் அவர்களும், CCH நிறுவனனத்தின் தலைவர் திரு மயூரன் அவர்களும் தொழிலதிபர் இஸ்மாயீல் சம்சமீர் ஹாஜியார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
கௌரவ அதிதிகளாக அப்துல் அஹத் ஜஸீர், திருமதி சியானா நியாஸ் (பெண்கள் உரிமைக்கான அமைப்பு). மாநகர சபை உறுப்பினர்களான BMS சரபுல் அனாம், AM ரொயிஸ், என் எம் அப்துல்லாஹ், ரமீஸ் றிஸ்லா, ஆகியோரும் கல்வி அக்கறையாளர் MJ ரிஷ்வான் அவர்களும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
உயர்தர வகுப்பில் கற்று அதன் பிறகு பல்வேறு கற்கை நெறிகளை கற்பதன் ஊடாகவே சிறந்த நிலையிலான தொழில் வாய்ப்புகளை பெற முடியும் என்றும் அந்த வகையில் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றால் ஒரு இலட்சம் முதல் 500000 வரை உள் நாட்டில் சம்பளம் பெறலாம் என்றும் வெளிநாடுகளில் குறிப்பாக மத்தய கிழக்கில் 10 முதல் 20 இலட்சம் வரை சம்பளம் பெறலாம் என்பதாக சிறப்புரையாற்றிய பட்டயக் கணக்காளரும் ஒஸ்மானியா கல்லூரியின் முன்னாள் மாணவருமான எம்.எஸ்.எம். ஜான்ஸின் அவர்கள் கூறினார்கள்.
கல்லூரி இந்த ஆண்டு பெற்றுள்ள 9A சித்தியென்பது வரலாற்றில் முதல் சாதனையென்றும் ஏற்கனவே மாணவர்கள் பெற்ற சிறப்பு சித்திகளையும் தரவரிசைப் படுத்தி கூறினார்.
பின்னர் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் 9A சித்திபெற்று சாதனை படைத்த ஜவ்சி முஹம்மது சிபாக் அவர்கள் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து சான்றிதழும், கழுத்து மெடலும் (கோல்ட் மெடல்) மற்றும் கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
தொடர்ந்து இரண்டாம் இடம் (3A, 3B) பெற்ற சுவைஸ் முஹம்மது ஹம்தாத் அவர்களும் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து சான்றிதழும் மற்றும் கழுத்து மெடலும் (கோல்ட் மெடல்) வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
தொடர்ந்து முஹம்மது நியாஸ் நபீஸ் அஹமத் , ரஸ்வான் அப்சர், முஹம்மது காமில் முஹம்மது ரிபாக் போன்ற மாணவர்களும் கௌரவிக்கப் பட்டனர்.
ஒஸ்மானியா கல்லூரியில் தொடர்ந்து உயர்தர வகுப்பு கலை மற்றும் வணிகள் கல்வி துறை , கம்பியூட்டர் துறை போன்றவை தொடர ஆவண செய்யுமாறு மாநகர சபை உறுப்பினர்களிடமும் பழைய மாணவர் சங்க செயலாளர் சஸான் அவர்களிடமும் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.
இந்த தலைமைத்துவம் பற்றிய கருத்தியல்கள் மற்றும் கல்விச் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்ச்சிகளை பட்டையாக கணக்காளர் எம்.எஸ்.எம். ஜான்ஸின் ஹாஜியார் அவர்களும் தொழிலதிபர் இஸ்மாயில் சம்சமீர் ஹாஜியார் அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளை பாதுஷா ரமீஸ் ஆசிரியை அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.

Post a Comment