அடுத்த அடுத்த வருடங்களில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி
தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னிலை வகிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உள்நாட்டு தொழில்துறையினரை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிலுள்ள சாத்தியக் கூறுககளை அடையாளங் கண்டு அவற்றை வெற்றிகொள்ள அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழில்முனைவோருக்கும் அழைப்பு விடுத்தார். இப்பணியை வெற்றிகொள்வதற்கான தமது முன்மொழிவுகள் மற்றும் இத்துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறும் ஜனாபதி கோரிக்கை விடுத்தார்.

Post a Comment