Header Ads



கைதாகுவதை தடுக்க நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ள கோட்டாபய


தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) இடம்பெறவுள்ளது. 


இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் இந்த மனு விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 


கடந்த 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நான்காவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்ட இந்த மனு தொடர்பான மேலதிக பரிசீலனை இன்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது

No comments

Powered by Blogger.