Header Ads



அமெரிக்காவும், சவூதியும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.


அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.


அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட்  மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.


சவூதி அணுசக்தித் திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு "பெரிய அளவிலான அணுகலை" அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழங்கும். இந்த ஒப்பந்தமானது "அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்" மற்றும் "இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்" ஆகிய இரண்டு உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.