Header Ads



மக்களை துன்புறுத்தும் பொலிஸார் மீது கடும் நடவடிக்கை


மக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  வூட்லர் தெரிவித்துள்ளார்.


வதுபிட்டிவல பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கடையொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்துமாறு கூறி, மோட்டார் சைக்கிள் சாரதியை திட்டித்தீர்த்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அந்த உப பொலிஸ் பரிசோதகர், மோட்டார் சைக்கிள் சாரதியிடம் "வேண்டுமானால் எனது சீருடையை நீயே போட்டுக்கொள்" என்று கூறும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

No comments

Powered by Blogger.