உடனடித் தேர்தலை வலியுறுத்தும் தேசப்பிரிய
மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாணசபைகள் இயங்குவது ஓர் குற்றமாகும். மாகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாக சிலர் கூறிய போதிலும் அது யதார்த்த பூர்வமானது அல்ல என மஹிந்த தேசப்பிரிய இன்று (30) நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள் நிர்வாகம் செய்யும் போது அவர்கள் மக்களுக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய அவசியம் இல்லை. எனவே நாட்டின் மக்களுக்கு நேரடியாக பொறுப்பு சொல்லக்கூடிய வகையில் மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமானது.
மாகாண சபை தேர்தலை நடத்தாது விட்டால் அது நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி மன்றங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்க முடியும் என்ற நிலையை உருவாக்குமல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment