அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது..
எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் மக்கள் அரசாங்கத்துடனே இருக்கிறார்கள். நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கலாம். மாகாண சபை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளது.
ரணில், பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதிதாக ஒன்றிணையவில்லை. கடந்த காலங்களிலும் அவர்கள் ஒன்றிணைந்தே செயற்பட்டார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியால் எங்களுக்கு எவ்வித சவாலும் இல்லை.
எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வுகளால் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது, நாங்கள் முன்னோக்கிச் செல்லும் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். எதிர்க்கட்சியினர் பின்நோக்கிச் சென்ற போதிலும், அரசாங்கம் தான் வைத்த அடியை ஒருபோதும் பின்னுக்கு வைக்காது.
JVP செயலாளர் ரில்வின் சில்வா

Post a Comment