கட்டாரின் தந்தை ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன்...
கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ X தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாரின் தந்தை ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன். அவரது தொலைநோக்குத் தலைமையும், கட்டார் தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவையும் எப்போதும் நினைவுகூரப்படும்.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, அரச குடும்பத்தினருக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment