மாணவர்களுக்கு கை மற்றும் கால்களை மூடும் விதத்திலான ஆடைகளுக்கு அனுமதி
நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காகப் பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் டெங்கு பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உரிய தரத்திலான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துமாறு குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment