Header Ads



ராஜபக்ச குடும்பம் சிறைக்குச் செல்வதனை தடுக்க பௌத்த மாநாடு


மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மகா சங்க மாநாடு நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறைக்குச் செல்வதனை தடுத்து அவர்களை பாதுகாக்கும் நோக்கில் சில பிக்குகள் இந்த சங்க மாநாட்டை நடத்துகின்றனர். ராஜபக்சர்களை காப்பாற்றும் இந்த நாடகத்திற்கு பிக்குகளினால் செல்ல முடியாது. இந்த மாநாடு பௌத்தத்தை பாதுகாக்கும் நோக்கிலோ, பௌத்தத்தை மேம்படுத்தும் நோக்கிலோ நடத்தப்படுவது அல்ல 


மாநாடு மக்களினது நாட்டினதோ நலனை கருத்திற் கொண்டு நடத்தவும் இல்லை. குற்றச் செயல்கள் கொலைகள் ஊழல்கள் போன்றவற்றை மேற்கொண்ட ராஜபக்ச தரப்பினர் சிறைக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் இந்த சங்க மாநாடு நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.