பீபாவிற்கும் அதன் தலைமைக்கும் ஐரோப்பிய நாடுகளின் மிரட்டல் - புறக்கணிக்கவும் தீர்மானம்
உலகக் கிண்ண போட்டிகளின் வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பீபாவின் (FIFA) திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இந்தத் தனியார் முதலீட்டு திட்டத்தை ஃபீஃபா உடனடியாகக் கைவிடாவிட்டால், அதன் உலகக் கிண்ணம் உள்ளிட்ட எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்காது என உவேஃபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (30) அவசரமாகக் கூட்டப்பட்ட (UEFA) வின் (Online) கூட்டத்தில் 55 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பீபாவின் இந்த வணிகமயமாக்கல் திட்டத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருமனதாக (55-0) வாக்களித்தன. பீஃபா தனது முடிவை முழுமையாகத் திரும்பப் பெற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற தனியார் முதலீடுகளுக்கு வழிவகுக்காது என்ற உறுதியை அளிக்கும் வரை இப்புறக்கணிப்பு அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது

Post a Comment