Header Ads



முதல் 6 மாதங்களில் 2.95 டிரில்லியன் வருமானம் பெற்று அரசாங்கம் அபார சாதனை


2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 அரச நிதி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 சதவீத வளர்ச்சியாகும்.


வரி வருமானத்தில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதுடன், அவ்வமைப்பினால் 1,290 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 48 சதவீதமாகும்.


இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து கிடைத்துள்ளதுடன், அதன் மூலம் 1,248 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 46 சதவீதமாகும்.

No comments

Powered by Blogger.