Header Ads



கம்பி எண்ணிக் கொண்டிருந்த விஜயதாசவின் மகன் வெளியே


முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுள் ஒருவரான அருண ஹென்னதிகே ஆகிய மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. 


கடந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்களின் சட்டத்தரணிகளால் இந்த பிணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 


இதற்கமைய, இன்றைய தினம் பிணை உத்தரவை அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார். 

No comments

Powered by Blogger.