Header Ads



இலங்கையில் முதன்முறையாக


இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது 'Canal-Top Solar' சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் 'வியானா கால்வாய்'  பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட பரந்த கால்வாயாக இருப்பதால், தேசிய மின்சார அமைப்பிற்கு அதிகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்கும் சாத்தியம் மற்றும் ஆண்டின் பெரும்பகுதியில் கிடைக்கும் சிறந்த சூரிய ஒளி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்காக வியானா கால்வாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சூரிய மின்தகடுகள் மூலம் கால்வாயை மூடுவதனால் நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்துதல், கடுமையான வெப்பமான காலநிலையின் போது நீரின் வெப்பநிலையைத் தகுந்த மட்டத்தில் பேணுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற மேம்பட்ட மின்சக்தி திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தல் என்பன இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும். 

No comments

Powered by Blogger.