கம்மன்பிலவின் கண்டுபிடிப்பு இது
இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமாரவை விட பாதாள உலகம் குழு தலைவர் கஞ்சி பானை இம்ரான் செல்வாக்கு மிக்கவர் என பிஉதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்கள் அநுரகுமாரவிற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வழங்கிய போதிலும் தற்பொழுது நாட்டை ஆள்பவர்கள் ரில்வின் சில்வா, மெல்கம் ரஞ்சித் கஞ்சிபானி இம்ரான் ஆகியோரே.
பௌத்த பெரஹர நிகழ்வு ஒன்றில் காவடி நடனத்தை உள்ளடக்குவதா இல்லையா என்பதை கஞ்சிபானி இம்ரானே தீர்மானிக்கின்றார். இலங்கை வரலாற்றில் இதுவரையில் பௌத்த பெரஹரா நிகழ்வு ஒன்றில் என்னென்ன அங்கங்கள் உள்ளடக்க வேண்டும் என பௌத்தர் அல்லாத ஒருவர் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் இதுவே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment