நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி மரியாதை
வெலிக்கடை சிறைச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எந்தவித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த அதிகாரி அன்றைய தினம் துரிதமாகச் செயற்பட்டு, துப்பாக்கிப்பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு மிகப்பெரிய பேரழிவும் பெரும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment