Header Ads



இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதற்கு காரணம் என்ன..?


இலங்கை தற்போது ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதற்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டதே முக்கிய காரணம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மையான தகவல்கள், அக்காலப்பகுதியில் இருந்த ஜனாதிபதிகளிடம் கூட மறைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதுவே நாட்டைப் பாதுகாப்பதற்கான ஒரே தெரிவாக இருந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.