இலங்கை முதலிடத்தைப் பெற்றது
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச சுற்றுலா ஊடகமான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, உலகின் முன்னணி தீவு சுற்றுலாத் தலங்களாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த கிரீஸ், போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைப் பின்தள்ளி இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

Post a Comment