3,398 பட்டதாரிகளுக்கு மூன்று நாட்களில் 9 அமர்வுகளாக பட்டங்கள்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்- 3,398 பட்டதாரிகளுக்கு மூன்று நாட்களில் 9 அமர்வுகளாக பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (25) ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி பாயிஸ் முஸ்தபா (PC) முன்னிலையிலும், உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலும் நடைபெறும் இவ்விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்பை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மேற்கொண்டு வருகின்றார்.
முதலாம் நாளான இன்று நடைபெற்ற முதல் அமர்வில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட மாணவர்களுக்கான பட்டமளிப்பு இடம்பெறவுள்ளது.
Post a Comment