Header Ads



கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி


அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்டார். கமேனியுடன் சேர்த்து அவருடைய மூத்த மகள், மருமகன், மருமகள், 14 மாதமே ஆன அவரது பேத்தி ஜஹ்ரா முகமது கோல்பயேகானி ஆகியோரும் பலியாயினர். 


அவர்களது உடல்கள் குளிரூட்டப்பட்ட ரகசிய அறையொன்றில்  4 மாதங்களாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உடல்களுக்கான இறுதிச்சடங்கு நேற்று தெஹ்ரானில் தொடங்கியுள்ளது.


இதன்போது, ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பெரிய சவப்பெட்டிகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த கமேனியின் 14 மாத பேத்தி ஜஹ்ராவின் சிறிய சவப்பெட்டி அங்கு திரண்டிருந்த மக்களை உலுக்கியுள்ளது. 


போரின் கோர முகத்தையும், அது அப்பாவி குழந்தைகள் மீது நிகழ்த்தும் கொடூரத்தையும் அஞ்சலி செலுத்த வந்தவர்களின் நெஞ்சங்களில் இந்தத் துயரக் காட்சி ஆழமாக எடுத்துரைத்துள்ளது

No comments

Powered by Blogger.