Header Ads



முஸ்லிம்கள் என்ற பெயரை திட்டமிட்டு தவிர்த்தார்கள்...


தில்லியில் ஹவுஸ் ராணி என்கிற பகுதியில் திடீர் தீ விபத்து. மக்கள் பரிதவிக்கின்றார்கள். 


ஆமிர் கான், முஹம்மத் சுஹைப், வஸீம் ராஜா, முஹம்மத் அஃப்ஸல் ஆகிய 4 முஸ்லிம்கள் சட்டென்று தீக்குள் பாய்கின்றார்கள். தகிக்கும் சுவர்கள், புகை நிறைந்த படிக்கட்டுகளின் ஊடே மக்களைக் காப்பாற்றுவதில் முனைகின்றார்கள். ஏராளமானோரை வெற்றிகரமாகக் காப்பாற்றுகின்றார்கள். 


மேல்தளத்தில் பதைபதைத்து நிற்கின்ற மக்களின் அபயக் குரலைக் கேட்கின்றார் ரியாசுத்தீன். மெத்தை வியாபாரி. உயர்தர, கனத்த மெத்தைகள்தான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. 


ரியாசுத்தின் உடனே தீர்மானிக்கின்றார். கடையிலிருந்த உயர்தர மெத்தைகளை வெளியே எடுத்து வந்து ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பரப்பி வைக்கின்றார். மேல்தளத்திலிருந்து மக்களை குதிக்கச் சொல்கின்றார். மெத்தை மேல் குதித்து சொற்பக் காயங்களுடன் மக்கள் உயிர் தப்புகின்றார்கள். 


முஸ்லிம்களின் இந்தத் தீரச் செயல் பரப்பரப்பாகப் பேசப்படுகின்றது. காணொளிகள் வைரலாகின்றன. மக்கள் கொண்டாடுகின்றார்கள். 


பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. என்ன எழுதினார்கள் தெரியுமா? 


‘மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய உள்ளூர் மக்கள்’


முஸ்லிம்கள் என்ற பெயரை திட்டமிட்டு தவிர்த்தார்கள்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே! 

(Azeez Luhftullah)

No comments

Powered by Blogger.