வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் வெடித்ததில்
இவ்வாறு உயிரிழந்தவர் மொதரவான, ருக்தெனகஹ கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பஸ்நாயக்ககே குணரத்ன (வயது 51) என்பவர் ஆவார்.
அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்காலை பேருந்து நிலையத்திற்கு வந்த நடத்துனர், திடீரென தரையில் விழுந்து கடுமையான வெறித்தனமாக துடித்துள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் அவரது கை, கால்களைக் கட்டி, ஆம்புலன்ஸ் மூலம் தங்காலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்த விசாரணையைத் மரண விசாரணை அதிகாரி ஷியாமல் வர்ணகுலசூரிய, தங்காலை ஆதார மருத்துவமனையில் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்தவரின் வயிற்றுக்குள் (இரைப்பையில்) ‘ஐஸ்’ போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும், தலா 20 கிராம் எடையைக் கொண்ட 2 பாக்கெட்டுகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்ததன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Post a Comment