Header Ads



தாக்குதல் தாரிகளை வழிநடத்திய சுரேஷ் சலே - பாராளுமன்றத்தில் அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரி உள்ளிட்ட இஸ்லாமிய மதம் சார்ந்த நபர்களை அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வழிநடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்து,  இது குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால  நாடாளுமன்றில் இன்று (10) கூறியுள்ளார்.


இது குறித்து தற்போது ஏற்பட்டுள்ள தடங்களை நீக்க சட்டமா அதிபரின் ஆலோசனைகள் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த விசாரணையில் சுரோஷ் சலே தாக்குதல் தாரிகளை வழிநடத்தியுள்ளமை தெளிவாகியுள்ளது.


இஸ்லாமிய தாக்குதல்தாரிகளுக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் குறித்த தகவல்களை பெற்றுக்கொடுக்கும் பின்னணி குறித்தும் சலே மீது தெளிவான ஆதாரங்கள் கிடைத்தள்ளன.


சஹ்ரான் ஹாசிம் உற்பட தாக்குதல் தொடர்பில் பாணந்துரை காவல்துறைக்கு கிடைத்த தகவலும் மூடி மறைக்கப்பட்டு, விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள முக்கிய சுற்றுலா விடுதியில் சலேவுடன் தாக்குதல்தாரிகள் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.


இவை அனைத்தும் தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசித்து வரும் அசாத் மௌலானாவினால் வெளிப்படுத்தப்பட்டவை. சுரோஸ் சலேவே தாக்குதலுக்கான பின்புலத்தை தயாரித்ததாக கூறப்படுகிறது. தற்போது சலே குறித்து முன்வைக்கப்படும் எந்த உரிமையும் அவருக்கு மீறப்படவில்லை. கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை கூறிய அறிக்கை அவருடைய குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.


சட்ட அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குளுவுக்கும் சலேவின் கைது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்.  வெள்ளிக்கிழமைகளில் நெருங்கிய உறவுகளுடன் தொலைபேசியில் உரையாடவும், சனிக்கிழமைகளில் அவர்களை பார்க்க அனுமதியையும் வழங்கி வருகின்றோம்.


குறிப்பாக அசாத் மௌலானாவின் சாட்சியங்களை அறிக்கையாக தயார் செய்யும் பின்னணியில் விசாரணைக்கு தடை ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னரே சலேவுக்கான பிரச்சினைகள் எல்லாம் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் அவர் விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கின்றார் என்பது தெளிவாகிறது.

No comments

Powered by Blogger.