Header Ads



முஸ்லிம் சகோதரி தீ மூட்டி படுகொலை


மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் பிபில, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த  நான்கு பிள்ளைகளின் தாயாராவார்.


அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.


அவர் கோழி இறைச்சிக் கடையொன்றை நடத்தி வரும் ஒரு வர்த்தகர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்தக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.