போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்தவர்கள் கைது
அமெரிக்க டொலர் 600,000 பெறுமதியான போலி பணத்தாள்களை வைத்திருந்த பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (08.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, கொழும்பில் அமைந்துள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment