நீ ஒரு கிறுக்கன், இப்போது எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள்..
பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக ஈரான் மிரட்டியதைத் தொடர்ந்து, பெய்ரூட் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதலை ஒத்திவைக்குமாறு அதிபர் டிரம்ப் உடனடியாக இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவைத் தொலைபேசியில் அழைத்ததாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அழைப்பில், அதிபர் டிரம்ப் நெதன்யாகு மீது வெளிப்படையாகக் கோபமடைந்து, “நீ ஒரு கிறுக்கன். நான் மட்டும் இல்லையென்றால் நீ சிறையில் இருந்திருப்பாய். நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். இப்போது எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள். இதன் காரணமாக எல்லோரும் இஸ்ரேலை வெறுக்கிறார்கள். என்ன மயிரைச் செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கூறினார்.
ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை நெதன்யாகு சீர்குலைக்க முயற்சிப்பதாக டிரம்ப் கருதியதால், இரு தலைவர்களுக்கும் இடையே நடந்ததிலேயே இதுதான் மிக மோசமான அழைப்பு என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகிறார்.
News Sources Axios

Post a Comment