வாழ்க்கை மிகப் பெறுமதியானது - மாய்த்துக் கொள்ளாதீர்கள்
களுத்துறை, மீவனபாலானயில் தனது காதலன் தன்னை விடுத்து தனியாக வெசாக் தானசாலைக்கு சென்றதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக ஷானிகா செவ்வந்தி என்ற 25 வயது யுவதி தனது உயிரை மாய்த்துள்ளார்.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளதுடன், விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய தயாராகி வந்துள்ளனர்.
அப்பகுதியில் நடைபெற்ற தானசாலைக்கு செல்வதற்காக காதலனை அழைத்துள்ளார். எனினும் அவர் தனது காதலியை தவிர்த்து விட்டு தனியாகச் சென்றுள்ளார். தன்னை விட தானசாலையே முக்கியமாகி விட்டது என்ற உணர்வில் ஏற்பட்ட கடுமையான கோபத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
“அம்மா... நான் அவரைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன், இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல..” என அவர் வைத்தியசாலைக் கட்டிலில் இருந்து கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக தாயார் கூறியுள்ளார்.

Post a Comment